அனைவருக்கும் வணக்கம்,
கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நா முத்துக்குமார் அவர்களின் கவிதை மற்றும் பாடல் வரிகளை பதிவேற்றி வந்துள்ளோம். இப்போது நாம் அடுத்த கட்டமாக நா.முத்துக்குமார் அவர்களுக்கு பிரத்தியேகமாக ஒரு இணையதளம் தொடங்க வேண்டும் என்பதற்காக, இன்று பாரதி பெருமகனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 11-ம் தேதி இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. www.namuthukumar.com
ஏன்.. எதற்கு..?
இந்த இணையதளம் தொடங்கப்படுவதற்கான முக்கிய காரணம் நா.முத்துக்குமார் அவர்களின் பல பாடல்கள் பல்வேறு விதமான கவிஞர்கள் பெயர்களில் இணையத்தில் தவறாக இடம் பெற்றுள்ளன, மேலும் சில வேறு கவிஞர்களின் பாடல்கள் நா.முத்துக்குமார் அவர்களின் பெயர்களில் இணையதளத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தொடங்கப்பட்டது தான் நமது இணையதளம்.
நா.முத்துக்குமார் அவர்களின் பாடல் எது நா.முத்துக்குமார் அவர்களின் வரி எது என்பதனை அனைத்து மக்களும் தெரிந்து கொள்வதற்காக பிரத்யோகமாக இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் நா.முத்துக்குமார் அவர்களின் வரிகள் உடைய பாடல்கள் மற்றும் கவிதைகள் மட்டுமே இடம்பெறும் வேறு எந்த விதமான பாடல்களோ அல்லது வேறு கவிஞர்களின் கவிதைகளோ இடம்பெறாது.
இந்த பாடல் நா.முத்துக்குமார் எழுதிய பாடல் தானா என்ற ஐயம் உங்களிடம் எழுந்தால் உடனடியாக நமது இணையதளத்தில் அதை சரி பார்த்துக் கொள்ளலாம் நமது இளையதளபதி அந்த பாடல் பற்றிய தகவல்கள் கண்டிப்பாக இருக்கும்.
சமூக வலைதளங்களில் நமக்கு தொடர்ந்து ஆதரவு தந்தது போல் இந்த இணையதளத்திலும் நமக்கு தொடர்ந்து ஆதரவு தரவு வைத்து வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் அன்புடன்..
-அட்மின்
Super