விழிகளில் ஒரு வானவில் – Vizhigalil Oru Vanavil Song Lyrics

விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

உன்னிடம் பாா்க்கிறேன்
நான் பாா்க்கிறேன் என் தாய்முகம்
அன்பே உன்னிடம் தோற்கிறேன்
நான் தோற்கிறேன் என்னாகுமோ இங்கே

முதன் முதலாய் மயங்குகிறேன்
கண்ணாடி போல தோன்றினாய்
என் முன்பு என்னை காட்டினாய்
கனா எங்கும் வினா

விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

 

நீ வந்தாய் என் வாழ்விலே
பூ பூத்தாய் என் வோிலே
நாளையே நீ போகலாம்
என் ஞாபகம் நீ ஆகலாம்

 தேர் சென்ற பின்னாலே
வீதி என்னாகுமோ யாா் இவன்
யாா் இவன் ஓா் மாயவன்
மெய்யானவன் அன்பில்

யாா் இவன் யாா்
இவன் நான் நேசிக்கும்
கண்ணீா் இவன் நெஞ்சில்
இனம் புாியா உறவிதுவோ
என் தீவில் பூத்த பூவிது
என் நெஞ்சில் வாசம் தூவுது
மனம் எங்கும் மனம்

விழிகளில் ஒரு வானவில்
இமைகளை தொட்டு பேசுதே
இது என்ன புது வானிலை
மழை வெயில் தரும்

 நான் உனக்காக பேசினேன்
யாா் எனக்காக பேசுவாா்
மௌனமாய் நான் பேசினேன்
கைகளில் மை பூசினேன்

 நீ வந்த கனவெங்கே
காற்றில் கை வீசினேன்
அன்பெனும் தூண்டிலை நீ
வீசினாய் மீன் ஆகிறேன் அன்பே

உன் முன்பு தானடா
இப்போது நான் பெண்ணாகிறேன்
இங்கே தயக்கங்களால் திணறுகிறேன்
நில்லென்று சொன்ன போதிலும்
நில்லாமல் நெஞ்சம் ஓடுதே
இதோ உந்தன் வழி

Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *