வெண்மேகம் பெண்ணாக – Venmegam Pennaga Song Lyrics In Tamil

வெண்மேகம் பெண்ணாக
உருவானதோ என் நேரம் எனைப்
பார்த்து விளையாடுதோ உன்னாலே
பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே வார்த்தை
ஒரு வார்த்தை சொன்னால் என்ன
பார்வை ஒரு பார்வை பார்த்தால்
என்ன உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே

வெண்மேகம் பெண்ணாக
உருவானதோ என் நேரம் எனைப்
பார்த்து விளையாடுதோ

மஞ்சள் வெயில் நீ
மின்னல் ஒளி நீ உன்னைக்
கண்டவரை கண் கலங்க நிற்க
வைக்கும் தீ பெண்ணே என்னடி
உண்மை சொல்லடி ஒரு
புன்னகையில் பெண்ணினமே
கோபபட்டதென்னடி தேவதை
வாழ்வது வீடில்லை கோயில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா உன் அழகை பாட
கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீ­ரில் ஆனந்தம் நான்
காண்கிறேன் உன்னாலே பல
ஞாபகம் என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே

எங்கள் மனதை
கொள்ளை அடித்தாய் இந்த
தந்திரமும் மந்திரமும் எங்கு
சென்று படித்தாய் விழி அசைவில்
வலை விரித்தாய் உன்னை
பல்லக்கினில் தூக்கி செல்ல
கட்டளைகள் விதித்தாய் உன்
விரல் பிடித்திடும் வரம் ஒன்று
கிடைக்க உயிருடன் வாழ்கிறேன்
நானடி என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ

வெண்மேகம் பெண்ணாக
உருவானதோ என் நேரம் எனைப்
பார்த்து விளையாடுதோ

Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *