வாம்மா துரையம்மா – Vaama Duraiyamma Song Lyrics

வாம்மா துரையம்மா
இது வங்ககரையம்மா
வாம்மா துரையம்மா
இது வங்ககரையம்மா
வணக்கம் சொல்லித்தான்
வரவேற்கும் ஊரம்மா

கட்டவண்டியில் போவோம்
ட்ராமில் ஏரியும் போவோம்
கூவம் படகிலும் போவோம் போலாமா
மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா
பெரிய யானை தும்பிக்கை
ஆசிர்வாதங்கள் எம்மா
கோடி அதிசயம் இங்கே
எம்மம்மா…

வாம்மா துரையம்மா
இது வங்ககரையம்மா
வணக்கம் சொல்லித்தான்
வரவேற்கும் ஊரம்மா

ஓர் பாவைக்கூத்துக்கள்
பொம்மல்லாட்டங்கள்
கோவில் சிற்பத்தில்
கலை வளர்ப்போம்
இன்னும் வாசல் கோலத்தில்
அரிசி மாவிலே
பறவைக்கும் எறும்புக்கும்
விருந்து வைப்போம்

கோடி ஜாதிகள் இங்கே
உள்ள போதிலும்
அண்ணன் தம்பியாய்
நாங்கள் வாழுவோம்
வீட்டில் திண்ணைகள்
வைத்துக் கட்டுவோம் எம்மா
வழிப்போக்கன் வந்து தான்
தங்கிச் செல்லுவான் சும்மா
தாயும் தெய்வம்தான் இங்கே
எம்மம்மா

வாம்மா துரையம்மா
இது வங்ககரையம்மா
வணக்கம் சொல்லித்தான்
வரவேற்கும் ஊரம்மா

ஓர் கோடி ஆண்டுகள்
தாண்டி வாழ்ந்திடும்
செந்தமிழ் எங்கள் மொழியாகும்
அட கம்பன் வள்ளுவன்
கவிதையில் சொன்ன
வாழ்க்கையே எங்கள் நெறியாகும்

இந்த பூமியில் நீங்கள்
எங்கும் போகலாம்
இங்கு மட்டுமே
அன்பை காணலாம்

வீர மன்னர்கள் வாழ்ந்த
நாடு இது எம்மா
இதை அடிமையாக்கித் தான்
கொடுமை செய்வது ஞாயமா
வலையில்  மழையும் தான்
விழுந்தது எம்மம்மா

 வாம்மா துரையம்மா
இது வங்ககரையம்மா
வணக்கம் சொல்லித்தான்
வரவேற்கும் ஊரம்மா

கட்டவண்டியில் போவோம்
ட்ராமில் ஏரியும் போவோம்
கூவம் படகிலும் போவோம் போலாமா
மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா
பெரிய யானை தும்பிக்கை
ஆசிர்வாதங்கள் எம்மா
கோடி அதிசயம் இங்கே
எம்மம்மா….

Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *