சுடலை மாடசாமி கிட்ட
சூடம் ஏத்தி வேண்டி கிட்டேன்
நேந்திக்கிட்ட காரணத்த உனக்கு சொல்லவா…
கூறப்பட்டு வாங்கி எனக்கு தாலி கட்டவா
சத்தியமா ஓரக்கமில்லை
சோறுதண்ணி எறங்கவில்லை
என் மனச திருடிபுட்ட
திருப்பி கொடுக்க வா…
என் உசுர உயிலு எழுதி
ஒனக்கு கொடுக்கவா
நேத்து வெச்ச ரோசா செடி
பூத்து நிக்குது முன்னால
காத்திருக்க ராசா நீயும்
மால கட்டு கண்ணால…
என் கொலுசு சத்தம் கேட்டு
என்ன அணைக்கா வா…
எக்க சக்க முத்தம் கொடுத்து
கட்டி புடிக்கவா
சுடலை மாடசாமி கிட்ட
சூடம் ஏத்தி வேண்டி கிட்டேன்
நேந்திக்கிட்ட காரணத்த உனக்கு சொல்லவா…
கூறப்பட்டு வாங்கி எனக்கு தாலி கட்டவா
மடியில தான் சாஞ்சிக்கிட்டு
கத பேச ஆசப்பட்டேன்
என் மசக்கைக்கு நீ மாந்தோப்பே
வாங்கித்தர ஆசப்பட்டேன்
என் தாவணியில் தூளிக்கட்டி
தாலாட்ட ஆசப்பட்டேன்
மீசை குத்தி மேலுதட்டில்
காயம் வர ஆசப்பட்டேன்
ஒன் பத்து விரல் பட்ட இடம்
பதறிப்போக ஆசப்பட்டேன்
அச்சம் மடம் நாணம் எல்லாம்
செதறிப்போக ஆசப்பட்டேன்
சுத்தி சுத்தி ஒன்முகம்தான்
வருதே மாமா
ஒன்ன நம்பி பூத்திருக்கேன்
நான் தான் ஆமா…
தேன் எடுக்க தாமதமா
வா வா மாமா…
தேனிலாவு நெலவிலதான்
ஆமா ஆமா…
கள்ளப்பய ஒன்மேல
தெரியாம ஆசப்பட்டேன்
கண் இமைக்கும் நொடியில தான்
புரியாம ஆசப்பட்டேன்
அள்ளி உன்ன முந்தியில
முடிஞ்சிகிட ஆசப்பட்டேன்
சொல்லி தரும் வித்தையெல்லாம்
தெரிஞ்சிகிட ஆசப்பட்டேன்
108 புள்ள குட்டி
பெத்து தர ஆசப்பட்டேன்
சாகும் வரை உன்னோட
சேர்ந்த வர ஆசப்பட்டேன்
சுத்தி சுத்தி ஒன்முகம்தான்
வருதே மாமா
ஒன்ன நம்பி பூத்திருக்கேன்
நான் தான் ஆமா…
தேன் எடுக்க தாமதமா
வா வா மாமா…
தேனிலாவு நெலவிலதான்
ஆமா ஆமா…
சுடலை மாடசாமி கிட்ட
சூடம் ஏத்தி வேண்டி கிட்டேன்
நேந்திக்கிட்ட காரணத்த உனக்கு சொல்லவா…
கூறப்பட்டு வாங்கி எனக்கு தாலி கட்டவா