முழுமதி அவளது – Mulumathi Avalathu Song Lyrics In Tamil

முழுமதி அவளது
முகமாகும் மல்லிகை
அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது
விழியாகும் மௌனங்கள்
அவளது மொழியாகும்

மார்கழி மாதத்து
பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி
அவளது நடையாகும்

அவளை ஒரு
நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம்
கேட்டேன் அதை கொடுத்தாள்
உடனே எடுத்தே சென்றுவிட்டாள்

ஓஹோ முழுமதி
அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி
அவளது குரலாகும் மகரந்த
காட்டின் மான்குட்டி அவளது
நடையாகும்

கால்தடமே பதியாத
கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில்
பூச்செடி ஆக நினைத்தேன்

கேட்டதுமே
மறக்காத மெல்லிசையும்
அவள்தானே அதன் பல்லவி
சரணம் புரிந்தும் மௌனத்தில்
இருந்தேன்

ஒரு கரையாக
அவளிருக்க மறுகரையாக
நான் இருக்க இடையில்
தனிமை தளும்புதே நதியாய்

கானல் நீரில்
மீன் பிடிக்க கைகள்
நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே
வேடிக்கை பார்க்கிறதே

 ஓஹோ முழுமதி
அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி
அவளது குரலாகும் மகரந்த
காட்டின் மான்குட்டி அவளது
நடையாகும்

அமைதியுடன்
அவள் வந்தாள் விரல்களை
நான் பிடித்து கொண்டேன்
பல வானவில் பார்த்தே
வழியில் தொடர்ந்தது பயணம்

உறக்கம் வந்தே
தலைகோத மரத்தடியில்
இளைப்பாறி கண் திறந்தேன்
அவளும் இல்லை கசந்தது
நிமிடம்

அருகில் இருந்தால்
ஒரு நிமிடம் தொலைவில்
தெரிந்தால் மறு நிமிடம்
கண்களில் மறையும்
பொய்மான் போல் ஓடுகிறாள்

அவளுக்கும்
எனக்கும் நடுவினிலே
திரையொன்று தெரிந்தது
எதிரினிலே முகம் மூடி
அணிந்தால் முகங்கள்
தெரிந்திடுமா

ஓஹோ முழுமதி
அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி
அவளது குரலாகும் மகரந்த
காட்டின் மான்குட்டி அவளது
நடையாகும்

Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *