மெல்ல ஊர்ந்து ஊர்ந்து ஊரு எங்கும் தேரு போகும் நேரம்
ஊறும் தேரிலே ஏ…. யாரு போவது
மெல்ல ஊஞ்சலாடி குலுங்கி குலுங்கி
அசைந்து போகும் கோலம்
பிஞ்சி மனதுடன் ஸ்கூல் பிள்ளைகள் போகுது
விண்ணின் மீன்கள் சேர்ந்து போக ஆசை கொள்ளுதே
இந்த கூட்டில் அந்த மீனும் சேராதோ…. (மெல்ல)
வானம் இரொம்ப பழையது மேகம் புதியது
துள்ளிடும் நிலாவுமே இன்று பிறந்து வந்தது
பாதை இரொம்ப நீண்டது பயணம் சிறியது
யாத்திரை ஓயாதது நீ செல்லும் முடிவைப் பொறுத்தது
முதல் முறை போகும் பயணத்தில் இன்பம்
மறுபடியும் திரும்பி வராது
தூரம் காட்டும் விளக்கொளி வாழ்த்தி போகும் நம் வழி
நாளை காலை பொழுது காட்டும் நமக்கும் நல்வழி (மெல்ல)
நாலு காலு ஆமை தான் நகர்ந்து போகுதே
தூரமும் தாண்டாமலே துவண்டு நின்று தூங்குதே
நாலு அடிக்கு ஓர் அடி நின்று போகுதே
மேடுகள் கண்டால் இது பின்னோக்கி உருண்டு ஓடுதே
ஏக வடவ ஓசை தாளங்கள் போடும்
குபு குபு என்று புகை விட்டுப் பாடும்
பாட்டி கதைய போலவே பறக்கும் மாயக்கம்பளம்
தேடிப் பிடித்து எடுத்து வா நீ பறந்து போகலாம் (மெல்ல)