மன மோகனா…
ஆஆ மன மோகனா… ஆ
ஆ என் உயிர் கண்ணா
ஆஹா கார்முகில் வண்ண
வாராயோ கோதையின்
குரலை கேளாயோ
விடை பெற்று
வாராய் காசி மதுர விடை
சொல்ல வாராய் வாழ்க்கை
புதிரா
நீயின்றி சுயம்
வரமா கார்முகில் வண்ணா
வாராயோ கண்ணா கோதையின்
குரலை கேளாயோ
துவாரகனே
இருளும் ஒளியும் இரு
விழி அருகே துரத்திடுதே
இருதயத்தில் துணையாக
நீ இருக்க மாட்டாயா
இரு வழிகள்
சந்திக்கும் இடத்தில்
கால்கள் ரெண்டும்
குழம்பிடுதே என்
பாதை சொல்வாயா
தேவகியின்
நாதலாலா திசை ஏது
சொல்வாயா
பிருந்தாவன
நந்தகுமாரா சகியின்
வேண்டுதல் அறிவாயா
நீங்காமல் வருவாயா
நகம் போல பிரிவாயா
நவனீதா முரளி
மனோகரா நங்கையின்
மனதை புரிவாயா
புறக்கணித்தே செல்வாயா
என்சோகங்கள்
தீர்ப்பாயா நீ ராகங்கள்
தீர்ப்பாயா
மன மோகனா ஆஆ
மன மோகனா ஆஆ ஆ மன
மோகனா ஆஆ மன மோகனா
ஆஆ ஆ என் உயிர் கண்ணா
ஆஹா கார்முகில் வண்ண
வாராயோ கோதையின்
குரலை கேளாயோ
புருஷோத்தமனே
உன் உதட்டில் புல்லாங்குழலாய்
தவழ்வேனா உன் சுவாச காற்றாகி
உயிர் பெற்று வாழ்வேனா
பார்த்திபனே உன்
பார்வையிலே பார் கடல்
அமுதம் பெறுவேனா பசி
தாகம் மறப்பேனா கோகுல
தோட்டத்திலே கோபியர்
ஆவேனா
வாழ்க்கை என்னும்
கடலில் தினமும் வலையின்
மேலே அலை அடிக்க இதயம்
என்னும் படகு அதில் தடுமாறி
மோதிடுதே
தூயவனே துடுப்புகள்
போட்டு கரையினில் ஏற்றி
விடுவாயா நடு கடலில்
விடுவாயா வசீகரா
மன்னவனே என் வேதனை
தீராயோ