கனவெல்லாம் பலிக்குதே – Kanavellam Palikuthey Song Lyrics

கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே

வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் அழைகிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிகிறதே
எனை விட உயரத்தில் பறந்து சிகரம் தொட

என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே

கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே

நடைவண்டியில் நீ நடந்த
காட்சி இன்னும் கண்களிலே
நாளை உந்தன் பேரை சொல்லும்
பெருமிதங்கள் நெஞ்சினிலே

என் தோளை தாண்டி வளர்ந்ததனால்
என் தோழன் நீ அல்லவா
என் வேள்வி யாவும் வென்றதனால்
என் பாதி நீ அல்லவா
சந்தோஷ தேரில் தாவி ஏறி
மனம் இன்று மிதந்திட

 என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே

கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே

கிளி கூட்டில் பொத்திவைத்து
புலி வளர்தேன் இதுவரையில்
உலகத்தை நீ வென்றுவிடு
உயிர் இருக்கும் அது வரையில்

என்னாளும் காவல் காப்பவன் நான்
என் காவல் நீ அல்லவா
எப்போதும் உன்னை நினைப்பவன் நான்
என் தேடல் நீ அல்லவா
என் ஆதி அந்தம் யாவும் இன்று
ஆனந்த கண்ணீரில்

என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே

கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே

வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் அழைகிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிகிறதே
எனை விட உயரத்தில் பறந்து சிகரம் தொட

என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே

Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *