ஜகட தோம் ஜகட
தோம் வாழ்க்கையே
போர்க்களம் ஜகட தோம்
ஜகட தோம் எழுதுவோம்
சரித்திரம்
நடந்து நடந்து
கால் தேயலாம் விழித்து
விழித்து கண் மூடலாம்
இருந்த போதும்
வா போரிலே மோதலாம்
இருட்டை
விரட்ட ஒரு சூரியன் அடுத்த
திருப்பத்திலும் தோன்றலாம்
நினைத்த கனவு கை
கூடலாம் கூடலாம்
ஜகட தோம்
ஜகட தோம் வாழ்க்கையே
போர்க்களம்
பலகோடி காலங்கள்
மண்ணுக்குள் வாழ்ந்தாலே
கரித்துண்டு வாழ்க்கை ஒரு
நாள் வைரமாக மாறும்
வரலாற்றில் எந்நாளும்
வலி இன்றி வாழ்வில்லை வழி
தானே வெற்றியில் ஏற ஏணி
ஒன்று போடும்
தீமையை தீயிட
தீமையை நாடிடு குற்றம்
அதில் இல்லை
தோட்டத்தை காத்திட
வெளியில் முட்களை
வைத்தால் தவறில்லை
கண்ணில் கார்காலம்
ஓ இன்றே மாறாதோ நெஞ்சில்
பூக்காலம் ஓ நாளை வாராதோ
நடந்து நடந்து
கால் தேயலாம் விழித்து
விழித்து கண் மூடலாம்
இருந்த போதும்
வா போரிலே மோதலாம்
இருட்டை
விரட்ட ஒரு சூரியன் அடுத்த
திருப்பத்திலும் தோன்றலாம்
நினைத்த கனவு கை
கூடலாம் கூடலாம்
ஜகட தோம்
ஜகட தோம் வாழ்க்கையே
போர்க்களம்
முடியாத பாதை
தான் கிடையாது மண் மீது
முன்னேறும் நதிகள் எல்லாம்
பள்ளம் பார்த்திடாது
விடியாத நாட்கள்
தான் கிடையாது விண்மீது
விழி சிந்தும் ஈரம் பட்டு
நெஞ்சம் மூழ்கிடாது
ஆலயம் என்பது
கோபுர வாசலும் சிலையும்
மட்டும்தான்
அதை விட மேல்
ஏது ஆண்டவன் வாழும்
நல்லோர் உள்ளம்தான்
தாய்மை என்றாலும்
ஓ உன் போல் ஆகாது உண்மை
நெஞ்சம்தான் ஓ உன்னை
போல் ஏது
நடந்து நடந்து
கால் தேயலாம் விழித்து
விழித்து கண் மூடலாம்
இருந்த போதும்
வா போரிலே மோதலாம்
இருட்டை
விரட்ட ஒரு சூரியன் அடுத்த
திருப்பத்திலும் தோன்றலாம்
நினைத்த கனவு கை
கூடலாம் கூடலாம்
ஜகட தோம்
ஜகட தோம் வாழ்க்கையே
போர்க்களம் ஜகட தோம்
ஜகட தோம் எழுதுவோம்
சரித்திரம்