இவன் தான் – Ivan Dhan Song Lyrics

இவன் தான் என்
கனவோடு வருபவனோ
என் மனதோடு வாழ்பவனோ
என் உயிரோடு கலந்தவனோ
என் வயதோடு கரைந்தவனோ

இவன் தான்…..
என் இதழோடு சிரிப்பவனோ
என் இரவோடு விழிப்பவனோ
என் இமையாக துடிப்பவனோ
என் சுமையாக இருப்பவனோ

என் கூந்தல் காட்டில்
தொலைந்திடுவானோ என்னை
கூறு போட வருபவனோ இந்த
சிறுக்கி மனசை பிடித்திடுவானோ
என் ஆசை பொறுக்கி ஆயுள் வரை
இவன் இவன் தான்

இவன் தான்
என் பாவாடை பூக்களிலே
ஒரு தேன் தேட பிறந்தவனோ
என் தேய்கின்ற நினைவுகளை
தேன் நிலவாக்க பிறந்தவனோ

லலலலல்லா
தரராரா தர ர ர ரா ரா
ர ர ர ரா ராரா இந்த சிறுக்கி
மனசை பிடித்தவனோ
தரராரா தர ர ர ரா ரா ர ர ர
ரா ராரா தர ர ர ர ரா

Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *