அவள் அப்படி ஒன்றும் அழகில்லை – Aval Apadi Ondrum Azhagilai Song Lyrics

அவள் அப்படி
ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும்
இணையில்லை அவள்
அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை } (2)

அவள் பெரிதாய்
ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன்
முடிக்கவில்லை அவள்
உடுத்தும் உடைகள்
பிடிக்கவில்லை இருந்தும்
கவனிக்க மறக்கவில்லை

அவள் அப்படி
ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும்
இணையில்லை அவள்
அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை

அவள் நாய்க்குட்டி
எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால்
தடுக்கவில்லை அவள்
பொம்மைகளை வைத்து
உறங்கவில்லை நான் பொம்மை
போல பிறக்கவில்லை

அவள் கூந்தல்
ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன்
மீளவில்லை அவள் கைவிரல்
மோதிரம் தங்கமில்லை கை
பிடித்திடும் ஆசை தூங்கவில்லை

அவள் சொந்தம்
என்று எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை

அவள் அப்படி
ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும்
இணையில்லை அவள்
அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை

அவள் பட்டுப்புடவை
என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும்
சிறந்ததில்லை அவள் திட்டும்
போதும் வலிக்கவில்லை அந்த
அக்கரைப்போல வேறு இல்லை

அவள் வாசம்
ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல்
சுவாசமில்லை அவள்
சொந்தம் பந்தம் எதுவுமில்லை

அவள் சொந்தம்
என்று எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை

அவள் அப்படி
ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும்
இணையில்லை அவள்
அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை

அவள் பெரிதாய்
ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன்
முடிக்கவில்லை அவள்
உடுத்தும் உடைகள்
பிடிக்கவில்லை இருந்தும்
கவனிக்க மறக்கவில்லை

Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *