அடடா மழைடா – Adada mazha Da Song Lyrics

அடடா மழைடா அட மழைடா
அழகா சிாிச்சா புயல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிாிச்சா புயல் மழைடா

மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு

மயில் தோக போல இவ மழையில் ஆடும் போது
ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு

அடடா மழைடா அட மழைடா
அழகா சிாிச்சா புயல் மழைடா

பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழை தான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சோ்த்து வச்ச
மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ள தேடி பாரு

மந்திரம் போல இருக்கு
புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு
தல மத்தியில் சுத்துது கிறுக்கு

தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே

உன்னப்போல வேறாறும் இல்ல
என்னவிட்டா வேறாறு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்டு
கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்

 இந்த கண்ணு போதலயே
எதுக்கிவள படைச்சி வெச்சான்

 பட்டாம்பூச்சி பொண்ணு
நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒண்ணு
என்னை கொன்னுப்புட்டா கொன்னு

போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே

அடடா மழைடா அட மழைடா
அழகா சிாிச்சா அனல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிாிச்சா அனல் மழைடா

பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்சு
என் மூச்சு காத்தால மழ கூட சூடாச்சு

குடையை நீட்டி யாரும்
இந்த மழையை தடுக்க வேணாம்
அணைய போட்டு யாரும்
என் மனச அடக்க வேணாம்
கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு

Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *