தண்டட்டி கருப்பாயி – Thandati Karupayi Song Lyrics

தண்டட்டி கருப்பாயி
தாளை ஊரு மருதாயி தண்டட்டி
கருப்பாயி தாளை ஊரு மருதாயி
பேச்சியம்மா சடங்காயி குச்சுக்குள்ள
வாராளே தனனே தானே போடு
தானே நானே நானே

பெண் : ஆர்மோனியம் பொட்டி
பொல்ல அவரு சத்தம் பண்ணுவாளே
ஆர்மோனியம் பொட்டி பொல்ல
அவரு சத்தம் பண்ணுவாளே கீழதூறு
மேளம் போல கீறிடுதோ உங்க ராகம்
வந்தாலும் வாங்க மறுத்த சுண்ணாம்பு
தாங்க போனாலும் போங்க பொங்கலோட
போடோவ தாங்க

குழு : தண்டட்டி கருப்பாயி
தாளை ஊரு மருதாயி தண்டட்டி
கருப்பாயி தாளை ஊரு மருதாயி
பேச்சியம்மா சடங்காயி குச்சுக்குள்ள
வாராளே

குழு : கொலுசுங்க சத்தமிட
கல் உடைய மண் உடைய
குதியாட்டம் போட்ட புள்ள
குமரி புள்ள ஆனாலே

குழு : ஆயிரங்கால் மண்டபத்த
அரனானில் பாத்தவக உன்
அழகபாக்கனுனா ஒரு மாசம்
புடிக்குமடி

குழு : உச்சநூறு மாமனுங்க
குச்சு கட்ட வந்திருக்கான்
உசுலம்பட்டி மாமன் காரன்
உச்சு கொட்ட வந்திருக்கானே

குழு : கல்லு வச்ச கம்மலையும்
கனமான சங்கிலியும் கல்லு பட்டி
மாமன் காரன் காலடியில்
வச்சிருக்கான் ஆசைக்கு பொட்டு
அழகென்ன காட்டு ஆத்தாடி
அதுக்குதான் காத்திருக்கான்

குழு : மொய் எழுதி வந்த நக
எடை போட்டு மாளுதடி
வெள்ளாட்டு குட்டி வெட்டி
வாத்தி எல்லாம் ரொம்புதடி
சோத்துக்குள்ள கரியா கரிக்குள்ள
சோறா பந்தியில சாதி சனம்
கொழம்புதடி

பெண் : மாமரத்து மேல்
இருந்து மாமரத்து மேல்
இருந்து நேத்து சமஞ்ச
புள்ள மாலை முடியயில்ல
மாலை முடியயில்ல மாலைக்கு
ஆச பட்டு மயங்குனாரு மாமன்
மகன் மாலைக்கு ஆச பட்டு
மயங்குனாரு மாமன் மகன் சுப
மங்கள நித சுப மங்களம்

குழு : வாயாடி பேச்செல்லாம்
ஏற கட்டிக்கோ வாலாட்டும்
வேலையெல்லாம் மூட்ட
கட்டிக்கோ பூவுன்னா வண்டு
வரும் புரிஞ்சி நடந்துக்கோ
பொண்ணுன்னா வெட்கம்
வரும் தெரிஞ்சு நடந்துக்கோ

பெண் : ……………………………………

பெண் : { அவன் பார்த்ததுமே
நான் பூத்து விட்டேன் அந்த
ஒரு நொடியை நெஞ்சில்
ஒளித்து வைத்தேன்

பெண் : நான் குழந்தை
என்று நேத்து நினைத்திருந்தேன்
அவன் கண்களிலே என்
வயதறிந்தேன் } (2)

பெண் : ………………………………

குழு : பம்பரக்கா சுத்தாம
அடக்கி வெச்சுக்கோ பல்லாங்குழி
ஆட என்ன துணைக்கு வெச்சுக்கோ
ஒத்தையில படுக்காத மனசில்
வெச்சுக்கோ நம்ம குல சாமி
தின்னூறு தலைக்கு வெச்சுக்கோ

Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *