முட்ட சந்து
மாமி மெஸ்ஸு
மூட்ட பூச்சி
அதுல கொசு
வாழ மட்ட சைக்கிள்
ரிக்க்ஷா ரோட்டு கடை
இட்லி வடை
ஐயர் ஆத்து ஹேய்
காத்துல தான் ஹார்மோனியம்
சா சா சா ரி ரி ரி க க க ம ம ம
ப த னி
பிள்ளையாரை போல
வாழும் பேச்சுலர்க்கு
திருவெல்லிக்கேணி
த்ரிப்லிகேன்
புறா கூண்டு போல
இங்கே முப்பது ரூமு அந்த
முப்பதிலும் மூணு மூணா
தொண்ணூறு மாமு } (2)
மக்கா சோளம் போல
நாங்க ஒட்டி வாழுறோம் இந்த
மாநகரில் கனவு கோட்ட கட்டி
வாழுறோம்
கதவில்ல கழிவறைக்கு
கதவில்ல கழிவறைக்கு பக்கெட்
காவல் மச்சி அச்சான அடுத்தாளு
உடனே டவல்
கதவில்ல கழிவறைக்கு
பக்கெட் காவல் மச்சி அச்சான
அடுத்தாளு உடனே டவல்
கையில பை கழுத்துல
டை கையில பை கழுத்துல டை
வாயுல பொய் சேல்ஸ்ஸு ரெப்பு
கெல்லாம் பேபே காட்டும் மன்சயன்
ஸு ஹாய்
கையில பை கழுத்துல
டை வாயுல பொய் சேல்ஸ்ஸு
ரெப்பு கெல்லாம் பேபே காட்டும்
மன்சயன் ஸு ஹாய்
நீ கிளாஸ் மேட்டா
இல்ல க்ளாஸ் மேட்டா நீ
கிளாஸ் மேட்டா க்ளாஸ்
மேட்டா வூட்ட கட்டுடா
இங்கு ஒன்னாம் தேதி ரெண்ட்
தந்தா ரூம் மேட்டா ஹா ஹா
ஹா ஆஹா ஆஹா
புறா கூண்டு போல
இங்கே முப்பது ரூமு அந்த
முப்பதிலும் மூணு மூணா
தொண்ணூறு மாமு
மக்கா சோளம் போல
நாங்க ஒட்டி வாழுறோம் இந்த
மாநகரில் கனவு கோட்ட கட்டி
வாழுறோம்
பதி மூணாம் நம்பர்
ரூம் சேட்டு ரூமுங்க அது
பணக்கார ஏழைன்னு கூட்டு
ரூமுங்க
பில்டர் கிங்ஸ் போக
விட்டு தூள் கெளப்புங்க மாச
கடைசி இல்ல கஞ்சா பீடி
துண்டு தானுங்க
பாபநாசம் அருவில்ல
குளிச்ச உடம்புங்க இங்க பாதி
பக்கெட் தண்ணி இல்ல
மொகத்த கலுவங்க
பர்முடாஸ் போட்டு
வரும் பெருசு பாருங்க இவர்
டை அடிச்சு டாவு அடிக்கும்
பேச்சலர்ங்க
ஓட்ட ஜட்டி ஓல்ட்
மோங் ஒன் பை டு டீ க்ளாஸ்
பேச்சலர் ஓட டெய்லி லைப்ங்க
ஒரு நாள் ஐஸ்வர்யா மறு நாள்
சுஷ்மிதா கனவுல தான் எங்க
ஒய்புங்க
இந்த சேவல் பண்ண
பல ஆள பாத்த எடமுங்கோ
அட ஆனாலும் ஒத்துமையா
வாழும் இடமுங்கோ
பல ஊர் பல பாஷை
இங்க இருக்கும்ங்க வயத்து
பசி மட்டும் எல்லாரையும்
ஒன்னு சேர்க்குங்க
தல வலிச்சா ஜுரம்
வந்தா நெஞ்ச நெகிழுங்க
உடனே துடிச்சு போய்
மன்சன் எல்லாம் மறந்து
படுகும்ங்க
பெத்த முகம் வளத்த
முகம் மறந்து போச்சுங்க
பாசம் மணி பர்ஸ் போட்டோ
வுல மறைஞ்சி போச்சுங்க
அத்த பையன் மாமன்
மொற உறவு இல்லைங்க
ஆனாலும் நாங்க எல்லாம்
மாமன் மச்சான்க
காதலுக்கு தாஜ் மஹால்
ஷாஜகான் கட்டி வச்சான் நாங்க
கூட கட்டுவோங்க எங்கள தான்
நம்பி வந்தா எங்க உயிர் போனாலும்
ஒன்னாக சேர்த்து வைபோங்க
இந்த சேவல் பண்ண
ஒத்துமைக்கு சிறந்த இடம்ங்க
நாங்க காதலரா சேர்த்து
வைக்கும் பேச்சலர்ங்க