நெஞ்சை கசக்கி
பிழிந்துவிட்டு போற
பொண்ணே ரதியே ரதியே
பஞ்சில் தீ மூட்டிவிட்டு
போறவளே கிளியே கிளியே
அடி மயிலே
மாமயிலே மதி மயக்கும்
பூங்குயிலே
நெஞ்சை கசக்கி
பிழிந்துவிட்டு போற
பொண்ணே ரதியே ரதியே
ஓ ஓ பஞ்சில் தீ மூட்டிவிட்டு
போறவளே கிளியே கிளியே
கம்பங்காட்டில்
களத்துமேட்டில் வண்டி
ஓட்டும் ஆச மாமா
கூச்சத்த தூக்கி குப்பையில்
போடு
ஏ பார்க்க பார்க்க
மனசு ஏங்கும் பழகி பார்க்க
வயசு கேட்கும் இதயத்தில்
இடம் இங்கு இல்லையே
அதை எடுத்தவள் கொடுக்கவும்
இல்லையே
காதல் எனக்கு
வேண்டாமே கவலை
மறந்து வா மாமா கைய
புடிச்சு கன்னம் தேச்சு
கதைகள் பேச வா வா
உள்ளம் கொடுப்பது
ஒருமுறைதான் இனி வாழ்வோ
சாவோ அவளுடன் தான்
வாய்ப்புகள் வருவது
ஒருமுறை தான் நீ இலக்கணம்
பார்த்தால் தலை வலிதான்
நெஞ்சை கசக்கி
பிழிந்துவிட்டு போற
பொண்ணே ரதியே ரதியே
ஹம்ம் பஞ்சில்
தீ மூட்டிவிட்டு போறவளே
கிளியே கிளியே
பார்வை பார்த்து
மயக்கி போனாள் பாவி
நெஞ்சை பறித்து போனாள்
ஆண்களின் ஜென்மம் அது
என்றுமே துன்பம்
நெருங்கி வந்தால்
விலகி போவோம் விலகி
போனால் நெருங்கி வருவோம்
பெண்களின் மனதில் என்னவோ
அது பெண்ணுக்கும் புரிவது
இல்லையே
ஆசை வைத்தேன்
உன்மேல் தான் வாழ்ந்து
பார்ப்பேன் உன்னுடன் தான்
பாதை தெரிந்தால் பயணம்
புரிந்தால் பாறை இடுக்கில்
ஒரு பூ தான்
கனவுகள் காண்பது
உன் உரிமை அது கலைந்தால்
தெரியும் என் நிலைமை
இரவும் பகலும்
உன் மடியில் கண்மூடி
கிடப்பேன் உன் அருகில்