இதயம் இடம் மாறியதே – Idhayam Idam Mariyathey Song Lyrics In Tamil

இதயம் இடம்
மாறியதே விழிகள்
வழி மாறியதே இதுதானே
காதல் என்று அசரீரி
கேட்கின்றதே

இந்த பூமி
முழுவதும் அழகாய்
மாறி போனதேனோ
என் வானின் மீது புதிதாய்
ஒரு மேகம் மிதப்பதேனோ

மனமே மனமே
எதனால் இத்தனை உற்சாகம்
உனக்குள்ளே புது வித தடுமாற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ

ஓஹோ மனமே
மனமே எதனால் இத்தனை
கொண்டாட்டம் கண்ணுக்குள்
கனவுகள் குடியேற்றம் உனக்கென்ன
நடந்தது சொல்வாயோ

சென் சூரியன்
ஜோதியில் சந்திரன்
ஒளி சேர்ந்ததோ
அசைந்தாடும் ஆழியில்
அழகிய நதி கலந்ததோ

சென் சூரியன்
ஜோதியில் சந்திரன்
ஒளி சேர்ந்ததோ
அசைந்தாடும் ஆழியில்
அழகிய நதி கலந்ததோ

காலம் என்னும்
நதியில் விழுந்து இரவும்
நகர்ந்தது பகலும் நகர்ந்தது
இதயம் நகர்ந்தது ஓ

இதயம் இடம்
மாறியதே விழிகள்
வழி மாறியதே இதுதானே
காதல் என்று அசரீரி
கேட்கின்றதே

ஹ்ம்ம் அலைபாயும்
காதலே அணையாத தீயா
வலித்தாலும் காதலே
இனிக்கின்ற நோயா

இசையோடு
சேரும் தாளம் சுதியோடு
பாடும் ராகம் அதைப்போல
எந்தன் நெஞ்சம் உன்னை
சேர்ந்ததே

 உள்ளம் சாய்ந்ததே
காதலின் கால்தடம் தந்ததும்
தீயா தந்ததும் தீயா தீயை
தொட்டு ரசித்தால் வந்ததும்
நீயா

ஹ்ம்ம் எந்தன்
கனவில் பூந்தோட்டம்
பூக்கள் பூக்கும் பெண்ணே
உன்னாலே பூவின் வண்ணம்
மட்டும் என் சொந்தம் பூவின்
வாசம் எல்லாமே உன் சொந்தமே

{ புது யுகமே பிறந்ததோ
பரிமாற்றம் நிகழ்ந்ததோ இரு
துருவம் இணைந்ததோ இரு
விழிகள் தொலைந்ததோ } (2)

காலம் என்னும்
நதியில் விழுந்து இரவும்
நகர்ந்தது பகலும் நகர்ந்தது
இதயம் நகர்ந்தது ஓ

இதயம் இடம்
மாறியதே விழிகள்
வழி மாறியதே இதுதானே
காதல் என்று அசரீரி
கேட்கின்றதே

மனமே மனமே
எதனால் இத்தனை உற்சாகம்
உனக்குள்ளே புது வித தடுமாற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ

Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *