மேகமே ஓ மேகமே – Megamey Oh Megamey Song Lyrics

மேகமே ஓ மேகமே
உன் மழையை கொஞ்சம் தூவாதே
மாலையில் அந்தி மாலையில்
உன்னை மறுபடி அழைப்போம் போகாதே

பக்கின்காம் கால்வாயில்
தண்ணீர்தான் நாம் கோயில்
அந்நாளும் வெளுத்துக்கட்டி
வாழுவோம்

 அட ஹோய்யா தள்ளிப்போயா
வெயில் போகும் முன்னே
வேலைய செய்வோம் வாயா

மேகமே ஓ மேகமே
உன் மழையை கொஞ்சம் தூவாதே
ஹேய் ஹேய்…..
மாலையில் அந்தி மாலையில்
உன்னை மறுபடி அழைப்போம் போகாதே
ஹேய் ஹேய்

சூரியன் உதிக்கும்போதே
சாயம் போட போவம்
சட்டுன்னு மழைத்துளி வந்தா
நாங்க தாயம் ஆடத்தான் போவோம்

வாடா வாடா வாடா
ஒரு தாயம்
ஆறு
வாடா வாடா வாடா
ஒரே ஒரு தாயம்
ஈராறு
வாடா வாடா வாடா
ஒரே ஒரு புள்ளி சே

நாங்க நொண்டி கழுதைமேல
நூறு மூட்டைப்போல
வாழ்க்கை வரும்போது நாங்க
வானம் தேடித்தான் போவோம்

சலவைக்காரன் வாழ்க்கை கூட
சாமிபோலதான்
உங்களோட பாவம்மூட்டை சுமப்போம்
அழுக்கோட வாழ்ந்தாலும்
நெஞ்சில்தான் அழுக்கில்லை
ஆகாயம் போல மனசு வெள்ளை

அட ஹோய்யா தள்ளிபோயா
வெயில் போகும் முன்னே வேலைய
செய்வோம் வாயா ஆ வாயா

கையில காசு இல்ல
மனசுல வேஷம் இல்ல
பொயில வாழ்க்க இல்ல
அதனால் கஷ்ட நஷ்டம்தான் இல்ல

ஹெலோ சார் டோரா
உன் சட்ட கர
என் கிட்ட வர
உட்டான் பார் அர

பள்ளிக்கூடம் பக்கம்
மழைக்கும் ஒதுங்கினது இல்ல
அனுபவ பாடம் படிச்சோம்
அதனால் வாழ்வீர் தோல்வி இல்லை

ஒரு மா கானி மா கானி
ஒரு மா கானி மா கானி
இரு மா கானி அரைக்கா
இரு மா கானி அரைக்கா
மும் மா கானி முண்டாணி
மும் மா கானி முண்டாணி
நா மா கானி கா
நா மா கானி கா

 எம்டன் போட்ட குண்ட போல
வருமா சில நேரம்
பதுங்கி பாஞ்சி அடிக்கும்போதும்
பயமில்ல ஹே

தலை சாஞ்சு போனாலும்
தன்மானம் சாயாது
மண்ணோடு ஈரம் போல வாழ்வோம்

 அட போய்யா தள்ளிபோயா
வெயில் போகும் முன்னே வேலைய
செய்வோம் வாயா

வாயா வாயா ஆ ஹோ
ஹோ ஹோ…….

மேகமே ஓ மேகமே
உன் மழையில் கொஞ்சம் நனைவோமே
மாலையில் அந்தி மாலையில்
எங்க மனச உனக்கு தந்தோமே

Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *