கண்ணீர் துளியே துளியே – Kaneer Thuliye Song Lyrics

கண்ணீர் துளியே துளியே
உன் கவலைகள் துடைத்திடும்
கைகள் இங்கே
கடல் மேல் மழை நீர் விழுந்தால்
அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே

கண்கள் என்று இருந்து விட்டால்
அதில் கண்ணீருக்கும் இடம் இன்றி போவதில்லை
கடவுளுக்கும் கவலை உண்டு
எங்கும் இன்பம் மட்டும் இருகின்ற இதயமில்லை

இந்த பாசம் அது ரொம்ப பொல்லாதது
அதிலே விழுந்தால் நீ எழுந்திட வழி இல்லை

கண்ணீர் துளியே துளியே
உன் கவலைகள் துடைத்திடும்
கைகள் இங்கே
கடல் மேல் மழை நீர் விழுந்தால்
அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே

மனதில் ஆயிரம் ஆசைகள் கடக்குமே
நினைத்தது வழியில் இடி வந்து கெடுக்குமே

நதியினில் விழுந்த இலைகளுக்கு
போகும் திசைகள் புரிவதில்லை
கரையில் இருக்கும் ஓடத்துக்கு
கடலின் கவலைகள் தெரிவதில்லை

யாரிடமும் குற்றமில்லை
காலம் செய்த குற்றம் இது தானோ

கண்ணீர் துளியே துளியே
உன் கவலைகள் துடைத்திடும்
கைகள் இங்கே
கடல் மேல் மழை நீர் விழுந்தால்
அதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே

யார் வந்து இடையில் இன்பத்தை கெடுத்தது
பரவைகள் கூடிலே கிளையை முரித்தது

கனவில் பூக்கும் பூக்களினை
கைகளில் பரித்திட முடிவதில்லை
காதலை மறக்க உலகத்திலே
மருந்துகள் எதுவும் கிடைப்பதில்லை

யாரிடமும் குற்றமில்லை
காலம் செய்த குற்றம் இது தானோ

Spread Na.Muthukumar lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *